விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள் முழு விவரம்
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அக்கட்சியின் மக்களவை தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று சிதம்பரத்தில் வெளியிட்டார்.
விசிக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்:-
ராமர் கோயில் கட்டுமானத்தில் ஊழல் குறித்த விசாரணை
கச்சத்தீவு மீட்பு
தேர்தல் ஆணையர் நியமண சட்டம் ரத்து
வாக்குபதிவு முறைக்கு பதிலாக பழையபடி வாக்குத் தாள் முறை
தொகுதிமறுசீரமைப்பில் தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதுகாப்பு
இந்தியா முழுவதும் தமிழ்ச் செம்மொழி வாரக் கொண்டாட்டம்
வறுமைக் கோட்டின் உச்சவரம்பினை உயர்த்துதல்
200 நாட்கள் வேலை வாய்ப்பு உறுதி சட்டம்
விவசாயத்திற்கு தனி பட்ஜெட்
பெட்ரோலியப் பொருட்களின் மீது அரசின் விலைக் கட்டுப்பாடு
சென்னையில் உச்சநீதிமன்ற கிளை
தமிழ்நாட்டிற்கென தனிக் கொடி
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல்
அமைச்சரவையிலும் மேலவைகளிலும் இட ஒதுக்கீடு
ஆவணக் கொலை தடுக்க தனிச் சட்டம்
ஆளுநர் பதவி ஒழிப்பு
ஆளுநரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கக் கூடாது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து
மாநிலங்களுக்கான உரிய நிதிப்பகிர்வு
அனைத்து மொழிகளிலும் அம்பேத்கர் நூல்கள்
அம்பேத்கர் பிறந்தநாளை அறிவுத்திருநாளாக அறிவிப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு
அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமை
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையே ஒழித்தல்
இடுகாடு பணியில் இருந்து தலித்துகளை விடுவித்தல்
தமிழ்நாட்டின் பொருளாதார தலைநகராக தூத்துக்குடி
மீனவர்களுக்கு தனி அமைச்சகம்
மதச் சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம்
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம்
நீட் தேர்வு ரத்து
https://twitter.com/thirumaofficial/status/1777603701030404191
Tags: அரசியல் செய்திகள்
