இரவில் கோவில் உண்டியலில் திருட முயன்றபோது கை உள்ளே சிக்கியதால் விடிய தவித்த திருடன் வைரல் வீடியோ
இரவில் கோவில் உண்டியலில் திருட முயன்றபோது கை உள்ளே சிக்கியதால் விடிய தவித்த திருடன் வைரல் வீடியோ
தெலுங்கானாவில் உள்ள ஒரு கோவிலில் திருட முயன்ற திருடனின் கை உண்டியலில் சிக்கியது
தெலுங்கானாவில் உள்ள காமரெட்டி மாவட்டம் ராமேஸ்வரபள்ளி கிராமத்தை சேர்ந்த சுரேஷ், என்பவர் அங்குள்ள மசுபள்ளி போச்சம்மா கோவிலில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கோவிலுக்கு சென்ற அவர் கோவில் உண்டியயில் இருந்த பணத்தை திருட முயன்றபோது, அதில் அவரது கை சிக்கிக்கொண்டது
அவரும் கையை எடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அவரது கையை அவரால் எடுக்க முடியவில்லை அப்படியே இரவு முழுவதும் உண்டியலில் சிக்கி கொண்ட கையுடன் கோவிலில் இருந்துள்ளார்
காலையில் கோவிலுக்கு வந்தவர்கள் சுரேஷை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் அவரது கையை ஹண்டியில் இருந்து அகற்றி, அவரை கைது செய்தனர்.குற்றம் சாட்டப்பட்ட திருடன் மீது திருட்டு முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது இனையத்தில் வைரல் ஆகின்றது வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/sudhakarudumula/status/1775469198602318089
Tags: வைரல் வீடியோ
