கன்னியாகுமரியில் நடந்தது என்ன ஜமா அத்துல் உலமா சபை விளக்கம் முழு விவரம்
அட்மின் மீடியா
0
கன்னியாகுமரியில் நடந்தது என்ன ஜமா அத்துல் உலமா சபை விளக்கம் முழு விவரம்
கன்னியாகுமரி முஸ்லிம் தெருவில் உள்ள 118 ஆண்டுகள் பழமையான சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலை 2018-ம் ஆண்டு முதல் JAQH எனும் அமைப்பு கைப்பற்ற முயன்றதால் பல்வேறு சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்பட்டு தற்போது வக்பு வாரியத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
இந்நிலையில் வக்ஃப் வாரியம் நியமித்த 12 பேர் கொண்ட ரமளான் சிறப்புக் குழுவிற்கு பாதுகாப்புப் வழங்கிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி ஆர்டிஓ முன்னிலையில் இரு தரப்பிலிருந்தும் மக்களை அழைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தி 17.03.2024 முதல் நோன்பு கஞ்சி விநியோகம் நடந்து வந்தது.
அதே (17.03.2024) நாளில் ஆர்டிஓ அமைதிக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி முஸ்லிம் தெருவில் வசித்து வரும் மக்கள் மின்விளக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த போது JAQH அமைப்பைச் சேர்ந்த அந்த தெருவில் வசிக்காத நபர்கள் அந்த அலங்கார வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களை தாக்கிஉள்ளனர் அந்த காணொளி தான் தற்போது தளங்களில் பரவி வருவது.
தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு கன்னியாகுமரி மீராசா ஆண்டவர் பள்ளிவாசலின் உன்மையான சொந்தக்காரர்களான "சுன்னத் வல் ஜமாஅத்" மக்களிடம் அந்த பள்ளி வாசலை ஒப்படைத்து அமைதி நிலவ உதவ வேண்டும் என்பதை மிக்க கனிவோடு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த அராஜக வேலை செய்த கும்பலை கன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை வன்மையாக கண்டிக்கிறது!!!
Tags: மார்க்க செய்திகள்