Breaking News

சென்னையில் பெண்களுக்காக பிங்க் வாக்குச்சாவடி தேர்தல் ஆணையம் ஏற்பாடு

அட்மின் மீடியா
0

சென்னையில் பெண்களுக்காக பிங்க் வாக்குச்சாவடி தேர்தல் ஆணையம் ஏற்பாடு


பெண்களுக்கான PINK வாக்குச்சாவடி மையம் சென்னையில் 16 இடங்களில் பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் மற்றும் மூதாட்டிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோர் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம், சாய்தளம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இங்கு பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் என அனைவரும் பெண்களே. கோடை வெயிலில், பெண்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க சிரமப்படுவார்கள் என்பதால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தாலும், இங்கு அனைவரும் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பிங்க் வாக்கு சாவடி மையம் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ஒன்று என அமைக்கப்பட்டுள்ளன. 

கர்ப்பிணிகள் , கைக்குழந்தை வைத்துள்ளவர்கள் , முதியோருக்கு தனித்தனி வரிசை அமைக்கப்படும். இதன் மூலம் பெண்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல் எளிதாக வாக்களித்துவிட்டு செல்லும் சூழல் செய்து தரப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback