Breaking News

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகர் மன்சூர் அலிகான் முழு விவரம்

அட்மின் மீடியா
0
காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகர் மன்சூர் அலிகான்

சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையுடன் நடிகர் மன்சூர் அலிகான் சந்திப்பு


காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான கடிதத்தை நடிகர் மன்சூர் அலிகான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகையிடன் கொடுத்துள்ளார். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும் , நடிகருமான மன்சூர் அலிகான் 

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரையும் காங்கிரஸ் கட்சியில் இணைக்க முடிவு எடுத்துள்ளேன் என்றார்.

தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியாது. தேர்தல் முடிவுக்கு பின்னர் மன்சூர் அலிகான் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback