மதராசா கல்விச் சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை முழு விவரம்
அட்மின் மீடியா
0
உத்தரப்பிரதேசத்தில் 2004ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மதராசா கல்விச் சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது
உபியை சேர்ந்த வழக்கறிஞர் அன்சுமன் சிங் ரத்தோர் என்பவர் மதரஸாக்கள் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் அரசியலமைப்பின் 21-ஏ பிரிவின் கீழ் தேவைப்படும் 14 வயது/8 ஆம் வகுப்பு வரை தரமான கட்டாயக் கல்வி மற்றும் மதரசாக்களில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தேவைக்கேற்ப உலகளாவிய மற்றும் தரமான பள்ளிக் கல்வியை வழங்க மதரஸா சட்டம் தவறிவிட்டது என அதில் குறிப்பிட்டு இருந்தார் இந்த வழக்கை நீதிபதிகள் விவேக் சவுத்ரி, சுபாஷ் வித்யார்த்தி விசாரித்தனர் விசாரனை முடிவில்
உத்தர பிரதேச மதரஸாகல்விச் சட்டம் 2004 அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது. இந்தசட்டம் மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் மதரஸாக்களில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்’’ என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 16,513 அங்கீகரிக்கப்பட்ட மதரசாக்கள் உள்ளன ,மதரசா தரப்பினர் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவினை விசாரித்த நீதிமன்றம் உத்தரப்பிரதேசத்தில் 2004ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மதராசா கல்விச் சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது
மேலும் மதரஸா சட்டத்தை உயர்நீதிமன்றம் தவறாக புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது, மதரஸா சட்டம் மதக்கல்வி கற்பிப்பது தொடர்பான எந்த விதிமுறைகளையும் வகுக்கவில்லை, மதரஸாக்களை ஒழுங்குப்படுத்துவதே மதரஸா கல்வி வாரியச் சட்டத்தின் நோக்கமாகும்🔹மதரஸாக்களை ஒழுங்குபடுத்த உத்தரவு பிறப்பிக்கலாம்; அதற்காக மதரஸாக்கள் சட்டத்தையே ரத்து செய்து செல்லாது என தீர்ப்பளிக்க முடியாது என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி
