Breaking News

காஷ்மீரில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையிடம் தனியாக சண்டையிட்ட வனத்துறை அதிகாரி - வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

காஷ்மீரில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையிடம் தனியாக சண்டையிட்ட வனத்துறை அதிகாரி - வைரல் வீடியோ


காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று சிறுத்தை ஒன்று நுழைந்தது. தகவல் அறிந்து சிறுத்தையை பிடிக்க வந்த வனத்துறை அதிகாரிகள் முயற்சி செய்தனர்

அப்போது வனத்துறை அதிகாரி ஒருவர் மீது சிறுத்தை அவர் மீது பாய்ந்து அவரது இடது கையை கடித்து பிடித்து கொண்டது சிறுத்தை வாயில் இருந்து கையை எடுக்க முடியாமல் திணறினார்.

அப்போது அருகில் நின்றிருந்த மற்றொரு அதிகாரி தடியால் சிறுத்தையை தாக்கினார். அந்த நேரத்தில் சிறுத்தையின் வாயில் இருந்து கையை எடுத்துக் கொண்ட அதிகாரி சிறுத்தையை கீழே சாய்த்தார். 

உடனடியாக ஊர் பொதுமக்கள் சிறுத்தையை தடியாலும் கட்டையாலும் தாக்கினர்.பின்னர், சிறுத்தையை வனத்துறையினர் அதிகாரிகள் பிடித்துச் சென்றனர். 

சிறுத்தையுடன் தனி நபராக நின்று சண்டையிட்ட வனத்துறை அதிகாரியை கிராம மக்கள் பாராட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/gharkekalesh/status/1775732280671289617

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback