விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி திடீர் மரணம் முழு விவரம்
அட்மின் மீடியா
0
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானார்!
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான ந.புகழேந்தி இவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
நேற்றைய தினம் விக்கிரவாண்டி வி. சாலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது திடீரென மேடையிலையே மயங்கி விழுந்த நிலையில் அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
