Breaking News

இனி யுபிஐ பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்யலாம்..! புதிய நடைமுறை விரைவில்

அட்மின் மீடியா
0

ரிசர்வ் வங்கி நாணய கொள்கை குழு (MPC) கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாகின. 

அதில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது.



டெபாசிட் இயந்திரத்தில் யு.பி.ஐ வசதி..

ஏடிஎம்களில் யுபிஐ மூலம் பண டெபாசிட் செய்ய ஆர்பிஐ முன்மொழிகிறது:ஏடிஎம்களில் பணம் டெபாசிட் செய்வது டிஜிட்டல் முறைக்கு: ஏடிஎம்களில் பணத்தை டெபாசிட் செய்வதற்கான புதிய முறையை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முன்மொழிந்துள்ளது

வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் தற்போது டெபாசிட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் கையில் உள்ள ரொக்கப் பணத்தை டெபாசிட் இயந்திரங்கள் மூலம் செலுத்தி வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துகொள்ளலாம்.

இந்த நிலையில், டெபாசிட் இயந்திரங்களில் யு.பி.ஐ வசதியை அறிமுகப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. தற்போது டெபாசிட் இயந்திரங்களில் பணத்தை செலுத்துவதற்கு டெபிட் கார்டுகளே பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், டெபாசிட் இயந்திரங்களில் யு.பி.ஐ பயன்படுத்தி டெபாசிட் செய்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார்

UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி தொடங்கப்பட்டால், பணம் மற்றும் கார்ட் எடுத்துச்செல்லும் தேவை இருக்காது.

ஏடிஎம் கார்டை நம்முடன் வைத்திருப்பதால் சில சமயங்களில் அது தொலையவும், திருடப்படவும் வாய்ப்புள்ளது.

சில நேரங்களில் ஏடிஎம் கார்ட் திருடப்பட்டால், அது பிளாக் செய்யப்பட்ட பிறகும் பணத்தை டெபாசிட் செய்வதில் சிக்கல் ஏற்படாது.

இந்த வசதி வந்த பிறகு, பணத்தை டெபாசிட் செய்ய வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback