Breaking News

இன்றும், நாளையும் வெப்ப அலைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதேபோல் 9, 10-ம் தேதிகளில் வடதமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது

அதிகபட்ச வெப்பநிலை:

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 3° 5° செல்சியஸ் அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் 4.5° 5.0° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருந்தது.

தமிழக உள் மாவட்டங்களில் பத்து இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40° 41.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது.ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 41.2° செல்சியஸ், சேலத்தியில் 41.2° செல்சியஸ், தருமபுரியில்41.0° செல்சியஸ் மதுரை நகரம் மற்றும் விமான நிலையம், நாமக்கல், திருப்பத்தூர்,திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.கோயம்புத்தூர், திருத்தணி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸ் முதல் 40° செல்சியஸ் வரை பதிவாகி யுள்ளது. கடலோரப் பகுதிகளில் 34° 37° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 23° 30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் 34.7° செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 35.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

06.04.2024  முதல் 10.04.2024 ம் தேதி வரை:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதும் இல்லை. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° 3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

06.04.2024 முதல்  07.04.2024 ம் தேதி வரை:

அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3° 5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக - இருக்கக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

06.04.2024 முதல் 07.04.2024  ம் தேதி வரை:

அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 40°- 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°- 40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34° 37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

08.04.2024 முதல் 10.04.2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில் 2° 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சக்கரிகை:

06.04.2024 முதல்  07.04.2024 அலை வீசக்கூடும். - வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்

ஈரப்பதம்: அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback