சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!
சூரத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!
சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்ட நிலையில், மற்ற வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர் . இதனால் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் 19ம் தேதி நடந்தது. ஜூன் 1ம் தேதி வரை இன்னும் 6 கட்டத் தேர்தல் நடக்க வேண்டி உள்ள நிலையில், ஒரு மக்களவைத் தொகுதிக்கான முடிவு தற்போது உறுதியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக சார்பில் களம் இறக்கப்பட்டவர் முகேஷ் தலால். இந்த தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிலேஷ் கும்பானி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இவர்களைத் தவிர்த்து 8 பேர் இந்த தொகுதிக்கு போட்டியிட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது 3 பரிந்துரையாளர்கள் அஃபிடவிட்டில் நாங்கள் கையெழுத்து இடவில்லை என அவர்கள் தெரிவித்தனால் அவரது மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தார்.
மேலும் சூரத் தொகுதியில் போட்டியிட்ட பிற வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை திரும்பப்பெற்றுக் கொண்டனர்.இதனால், பாஜக வேட்பாளரான முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகி உள்ளார். இந்த தகவலை மாநில முதல்வர் புபேந்திர படேல் தெரிவித்தார்.
குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 7ம் தேதி 3ம் கட்டத் தேர்தலில் வாக்குபதிவு நடக்க உள்ளது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
