Breaking News

சென்னையில் செல்போனில் பேசியபடியே சாலையைக் கடந்த இளம் பெண் உயிரிழப்பு முழுவிவரம்

அட்மின் மீடியா
0

செல்போனில் பேசியபடியே சாலையைக் கடந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் பைக் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். 

அசாம் மாநிலத்தை சேர்ந்த பலாரி அங்லாங் குச்சி பாணி வயது 24 இவர்,சென்னை அமைந்தகரையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் மேலும் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் அழகுக்கலை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். 

இவர் கடந்த 17 ம் தேதி இரவு பணி முடித்து வீட்டுக்கு செல்ல சாலையை கடக்கும் போது பைக் மோதியதில் பலாரியங்லால் பலத்த காயமடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சென்று அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தீவிர சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

செல்போனில் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயன்ற பாலாரியாங்லால் பானி மீது பைக் மோதியது தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான பைக் எண்ணை வைத்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback