Breaking News

ஜேஇஇ ஹால் டிக்கெட் வெளியீடு டவுன்லோடு செய்வது எப்படி

அட்மின் மீடியா
0

ஜேஇஇ முதல் அமர்வு தேர்வுகள் ஜன. 24ல் தொடங்கி பிப். 1ம் தேதி முடிந்தது. இதையடுத்து, இதற்கான 2ம் கட்ட முதன்மை தேர்வுக்கான விண்ணப்ப பதிவு பிப்.3ம் தேதி தொடங்கி மார்ச் 2ம் தேதி வரை நடைபெற்றது.இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வுகள் ஏப்ரல் 4 முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 3ல் தொடங்கி மார்ச் 2 வரை நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். 


ஏப்ரல் 4, 5, 6, 8, 9 தேதிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான முதல் தாள் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 12ம் தேதி, பி.ஆர்க்., பி.பிளானிங். படிப்புகளுக்குத் தனித்தனியாகவும் ஒரே தேர்வாகவும் மெயின் தேர்வு நடைபெறுகிறது. இவற்றில் 4, 5 மற்றும் 6 தேதிகளில் தேர்வு எழுத உள்ள தேர்வர்களுக்காக ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

தேர்வர்கள் jeemain.nta.ac.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள்

Give Us Your Feedback