Breaking News

ராகுல்காந்தி பற்றி பரவும் செய்தி பொய்யானது வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தா அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ராகுல் அண்ணாவின் மீது இப்படி அவதூறு பரப்புவதா?

யூடியூபில் பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனலின் தாத்தாவிற்க்கு இதய நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் ராகுல் காந்தியிடம் உதவி கேட்டதாகவும் ஆனால் ராகுல் காந்தி உதவி செய்ய மறுத்ததாகவும் தகவல் வெளியானது . 

ஆனால் இதை வில்லேஜ் குக்கிங் சேனல் சுப்பிரமணியன் வேலுசாமி முற்றிலுமாக மறுத்துள்ளார்.இது முற்றிலும் பொய்! எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது! இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.


டிவிட்டர் பக்கம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/vstamilan/status/1780064563125453207

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback