Breaking News

பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு முழு விவரம்

அட்மின் மீடியா
0

பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு

அனைத்து வாகனங்களிலும் பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும்

சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு காட்சிகள் சேகரிக்கப்பட்டு காவல்துறையிடம் வழங்கப்பட வேண்டும்.

போக்சோ சட்ட விதிகள் பற்றி ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும்

பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் குழந்தைகளை ஒப்படைத்த பின்னரே வாகனத்தை இயக்க வேண்டும்.

ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்ற காவல் துறை சான்று அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும்.

சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து காவல் துறையிடம் வழங்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஓட்டுநர்களுக்குத் தினமும் சுவாச சோதனை செய்தபின் தான் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும்

கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 10 ஆண்டு அனுபவமுள்ள ஓட்டுநரையே பள்ளி வாகனம் இயக்க நியமிக்க வேண்டும்.

பள்ளி வாகனங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஏப்.5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (தனியார்ப் பள்ளிகள்) உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களில் மாணவியர்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக வரும் புகாரையடுத்து தனியார் பள்ளிகள் இயக்குனர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback