தமிழகத்தில் சுங்கக்கட்டண உயர்வு நிறுத்திவைப்பு!
தமிழகத்தில் சுங்கக்கட்டண உயர்வு நிறுத்திவைப்பு!
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், தமிழகத்தில் அரியலூரில் மணகெதி, திருச்சியில் கல்லக்குடி, வேலூரில் வல்லம், திருவண்ணாமலையில் இனம்கரியாந்தல், விழுப்புரத்தில் தென்னமாதேவி சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று அமல்படுத்துவதாக இருந்த சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சுங்கக்கட்டணம் உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags: இந்திய செய்திகள்
