தாய்வான் நாட்டில் 7.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை நிலநடுக்கம் ஏற்பட்ட போது எடுக்கபட்ட வீடியோக்கள் 7,5 magnitude earthquake in Taiwan
தாய்வான் நாட்டில் இன்று அதிகாலை 5.28 மணிக்கு அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.4-ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தைவான் அருகே 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது
அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) படி, நிலநடுக்கத்தின் மையம் தைவானின் ஹுவாலியன் நகரத்திலிருந்து 18 கிலோமீட்டர் (11 மைல்) தெற்கே 34.8 கிமீ ஆழத்தில் இருந்தது. இதன் காரணமாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டில் உள்ள ஹுவாலியன் நகரில் இன்று (ஏப்.,03) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7.4 ரிக்டர் அளவில் பதிவானது. தைவான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த நிலநடுக்கம் பதிவானது.
தைவானில் ஒரு மணி நேரத்தில் 11 முறை வெவ்வேறு ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக தெற்கு ஜப்பானிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
நிலநடுக்கம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
நிலநடுக்கம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/Syed_GiLLaniG/status/1775342730819809322
https://twitter.com/fawadrehman/status/1775338736202514887
https://twitter.com/nayanpatel_tv/status/1775341008470819011
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
