Breaking News

மே 6 ம்தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 12th result 2024

அட்மின் மீடியா
0

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. 

இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா்.

இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும், மே 10ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேல்நிலை இரண்டாமாண்டு (2)-மார்ச்/ஏப்ரல் 2023- பொதுத்தேர்வு முடிவுகள் அறிந்துக்கொள்ள.

http://tnresults.nic.in 

http://dge1.tn.nic.in 

http://dge2.tn.nic.in 

http://dge.tn.nic.in 

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback