Breaking News

2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டி விரைவில் புதிய கட்சி நடிகர் விஷால் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

 2026ம் ஆண்டு புதிய கட்சி; நடிகர் விஷால் 2026ம் ஆண்டு புதிய கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவிப்பு!

தனியாக புதிய கட்சி தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளேன். மக்களவை தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற்றது என்கிற செய்தியை கேட்க விரும்புகிறேன்


2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக புதிய கட்சி தொடங்கப்படும் என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் செய்தியாளர்களுடன் பேசிய நடிகர் விஷால், “2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் என் பெயரும் இருக்கும். 

மக்களுக்கு போதுமான வசதிகள் இல்லை, அதனால்தான் அரசியலுக்கு வருகிறேன்.வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் அரசியல் கட்சி தொடங்கப்படும். ஏப்ரல் 19 ஆம் ஆண்டு 100% வாக்குப்பதிவு நடைபெற்றது என்ற செய்தியை கேட்க விரும்புகிறேன்.

நடிகர் விஷாலை பொறுத்தவரை அரசியல் பணிகளில் ஏற்கனவே ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தார் ஆனால் வேட்புமனுவில் தவறு இருப்பதாக கூறி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback