Breaking News

ரமழானின் போது முஸ்லிம்கள் லேப்டாப் திட்டம் 2024 என பரவும் பொய்யான செய்தி முழு விவரம் Free Laptop Fake News

அட்மின் மீடியா
0
பரவும் பொய்யான செய்தி:-

*ரமழானின் போது முஸ்லிம்கள் லேப்டாப் திட்டம் 2024க்கான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன*

இந்த 2024 ரமலானில், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் முஸ்லிம்களுக்கு எங்கள் திட்டம் திறக்கப்பட்டுள்ளது, சொந்த மடிக்கணினிகளை வாங்க முடியவில்லை, ஆனால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒன்று தேவை.

* 2024 இல் 850,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அவர்களின் கற்றலை மேம்படுத்த இலவச லேப்டாப் வழங்கப்படும்*

* விண்ணப்பம் தொடங்கியது மற்றும் விண்ணப்பித்த முஸ்லிம்கள் தங்கள் மடிக்கணினிகளைப் பெறத் தொடங்கியுள்ளனர்*

* காலக்கெடுவை:04/05/2024*

 விண்ணப்பிக்கத் தொடங்க கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்

என ஒரு செய்தி தற்போது பலரும் ஷேர் செய்கின்றார்கள்




உண்மை என்ன:-


இது போன்ற செய்திகளை நம்புகின்றவர்கள் முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என அட்மின் மீடியா விரும்புகின்றது

முதலில் இந்த செய்தியின் உண்மை என்னவென்றால்...

அது போல் ஓர் செய்தியை இந்திய அரசும் சரி, நம் தமிழக அரசும் இது போல் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள் 

இரண்டாவது எச்சரிக்கை அவசியம்

இது மாதிரி fake மெசேஜ் அனுப்பி உங்கள் போனில் உள்ள தகவல்களை அவர்கள் திருடலாம்

மூன்றாவதாக கவனம் தேவை 

இந்த லின்ங்கில் நீங்கள் போனால் என்ன நடக்கும் உடனடியாக இந்த தகவலை நீங்க 21 வாட்ஸ் குரூப்புக்கு ஷேர் பண்ணுங்க என வரும் நீங்களும் நம்பி அனுப்புங்க திரும்ப அந்த லின்ங்கில் போனாலும் மீண்டும் அதே போல் தான் ஒன்றும் இருக்காது 

நீங்கள் ஷேர் செய்து விட்டு போயிடுவீங்க நீங்கள் ஷேர் பண்ண அந்த வதந்தியை அவர்கள் அடுத்தவர்களுக்கு ஷேர் செய்வார்கள் இப்படியேதான் வதந்திகள் பரவிக் கொண்டே வருகிறது.

இது போன்ற பொய்யான செய்திகளால்  உங்கள் தகவல் திருடப்படலாம் என்பது  ஆதாரபூர்வமான உண்மை எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என வேண்டி கேட்டு கொள்கின்றோம்

இலவச லேப்டாப் என்ற மெசேஜ் உடன் வலம் வரும் இந்த மெசேஜ் போலியானது என்பதால் அதில் உள்ள லிங்க் கிளிக் செய்தால் தனிப்பட தரவுகள் திருடு போகும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் இதுபோன்ற மெசேஜை நம்ப வேண்டாம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback