Breaking News

தேர்தல் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான வினாடிவினா நிகழ்ச்சி 20 ஆயிரம் முதல் பரிசு முழு விவரம்

அட்மின் மீடியா
0

இளைஞர்கள் மற்றும் எதிர்கால வாக்காளர்களின் தேர்தல் பங்கேற்பினை வலியுறுத்தும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு குறிப்பாக முதல் முறை வாக்காளர்களுக்கு வினாடிவினா நிகழ்ச்சி



2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இளைஞர்கள் மற்றும் எதிர்கால வாக்காளர்களின் தேர்தல் பங்கேற்பினை வலியுறுத்தும் விதமாக 

கல்லூரி மாணவர்களுக்கு குறிப்பாக முதல் முறை வாக்காளர்களுக்கு வினாடிவினா நிகழ்ச்சியானது பெருநகர சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள அம்மா மாளிகையில் 13.04.2024 அன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் கல்லூரி மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

ஆர்வமுள்ள மாணவர்கள் தங்களின் பெயர். விவரம் மற்றும் கைபேசி எண் ஆகிய தகவல்களை goalquiz@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு இணையவழி முன்பதிவு மிகவும் அவசியமாகும். நேரடியாக இப்போட்டியில் பங்கேற்க இயலாது.

மேலும் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பல அணிகளை அனுப்பலாம். ஆனால் ஓர் அணி என்பது ஒரே கல்லூரியைச் சார்ந்த இரண்டு மாணவர்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.

முதல்நிலைச் சுற்று இணையவழியில் நடத்தப்படவுள்ளதால் (Google forms) பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களது கைபேசி மூலமே பங்கேற்க இயலும்.

தேர்தல்/ தேர்தல் நடைமுறை மற்றும் பொது அறிவு (முறையே 50%) சார்ந்து வினாடி வினா போட்டிகள் நடைபெறும்.

போட்டி குறித்த விவரம் பின் வருமாறு:-

போட்டி நடைபெறும் இடம்

அம்மா மாளிகை,

ரிப்பன் கட்டிடம்,

பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை.

போட்டி நடைபெறும்  நாள் மற்றும் நேரம்

13.04.2024- காலை 9.30 மணி முதல் நண்பகல்

12.30 மணி வரை

காலை 9.30 மணி

பரிசுத் தொகை

முதல் பரிசு. 20,000/-

இரண்டாம் பரிசு ரூபாய். 10,000/-

மூன்றாம் பரிசு ரூபாய். 5,000/-

இப்போட்டி குறித்து எழும் ஐயங்களுக்கு 9840927442 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback