Breaking News

பிளஸ் 2 வேதியியல் தேர்வு தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

அட்மின் மீடியா
0

பிளஸ் 2 வேதியியல் தோ்வு வினாத்தாளில் பிழை இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்க தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. 

+2 பொதுத்தேர்வில், வேதியியல் பாடத்திற்கான வினாத் தாளில் தவறான கேள்வி கேட்கப்பட்டிருந்ததால், அந்த கேள்விக்கு பதில் எழுத முயற்சித்த அனைத்து மாணவர்களுக்கும் அந்த கேள்விக்கான முழு மதிப்பெண்களாக 3 மதிப்பெண்களை வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற்றது.இதையடுத்து விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் 83 மையங்களில் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. அதில், வேதியியல் பாடத்தில் 3 மதிப்பெண் பகுதியில் 33-ஆவது வினா அம்சங்கள் தவறாக இருந்ததால் அதற்கு பதில் எழுத முயற்சித்தவா்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 3 மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வேதியியல் பாடத்தில் கேட்கப்பட்ட வினாத்தாளில், மூன்று மதிப்பெண் பகுதியில் உள்ள 33வது கேள்வி தவறாக கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback