தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு public holiday for april 19 lok sabha election poll day
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு public holiday for april 19 lok sabha election poll day
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில் பொது விடுமுறை அறிவித்து தலைமைச் செயலாளர் தேவதாஸ் மீனா உத்தரவு
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகம் புதுவையில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது
இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை தமிழ்நாடு ஆளுநரின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் தலைமை செயலர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கிணங்க, தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
