பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருள்களின் உரிமம் ரத்து உத்தரகாண்ட் அரசு அதிரடி அறிவிப்பு பட்டியல் இதோ
பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதித்த உத்தரகாண்ட் அரசு!பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ், ஆச்சார்யா பால்கிருஷ்ணா, மற்றும் திவ்யா பார்மசி மீது கிரிமினல் வழக்குப் பதிந்து உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை
பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருள்களின் உரிமம் ரத்து உத்தரகாண்ட் அரசு அதிரடி அறிவிப்பு பட்டியல் இதோ
பதஞ்சலி நிறுவன வழக்கில் அந்நிறுவனத்தின் 14 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாக உத்தர்கண்ட் அரசு தெரிவித்துள்ளது.
பதஞ்சலி' நிறுவனம் ஆயுர்வேதம் மற்றும் இயற்கை தயாரிப்புகள் என பல்வேறு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றது
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும், இணை நிறுவனராக யோகா குரு ராம்தேவும் உள்ளனர்.சில மாதங்களுக்கு முன் பதஞ்சலி வெளியிட்ட ஆயுர்வேத தயாரிப்பின் விளம்பரத்தை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதில், தவறான தகவலை வெளியிட்டதற்காக கோர்ட்டிடம் மன்னிப்பு கேட்பதாக வழக்கறிஞர் வாயிலாக பதஞ்சலி தெரிவித்தது.இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனர்களை நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தது. பின், பத்திரிகை வாயிலாக பொது மன்னிப்பு கேட்கவும் உத்தரவிட்டது.அதன்படி பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கேட்டு, பத்திரிகைகளில் சிறிய அளவில் விளம்பரம் செய்ததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி அடைந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் உத்தர்கண்ட் அரசு தாக்கல் செய்த பதிலில் பதஞ்சலி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 14 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
SWASARI GOLD
SWASARI VATI
BRONCHOM
SWASARI PRAVAHI
SWASARI AVALEH
MUKTA VATI
EXTRA POWER
LIPIDOM
BP GRIT
MADHUGRIT
MADHUNASHINI
VATI EXTRA POWER
LIVAMRIT ADVANCE
LIVOGRIT
EYEGRIT GOLD
DRISHTI EYE DROP
Tags: இந்திய செய்திகள்
