Breaking News

மும்பையில் ஷவர்மா சாப்பிட்ட12 பேர் மருத்துவமனையில் அனுமதி.! முழு விவரம்

அட்மின் மீடியா
0

மும்பையில் ஷவர்மா சாப்பிட்ட12 பேர் மருத்துவமனையில் அனுமதி.! முழு விவரம்


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகான் உள்ள சாட்டிலைட் டவரில் அமைந்துள்ள உணவகத்தில்  சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் கடந்த இரண்டு நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும், நல்வாய்ப்பாக அவர்களுக்கு மோசமான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதில் 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

ஷவர்மாவை பொறுத்தவரை ஸ்டாண்டில் மட்டுமே சமைக்கப்படுகிறது. அடுப்பில் வைத்து முறையாக சமைக்கப்படுவதில்லை. இதனால் அந்த ஷவர்மா சரியாக வேகாமல் போக வாய்ப்புகள் அதிகம். அதைச் சாப்பிடும் போது தான் வயிறு சம்பந்த பட்ட உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகிறது. கடந்தாண்டு ஷவர்மாவை சாப்பிட்ட சிலர் உயிரிழந்த சம்பவங்களும் கூட நடந்துள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback