Breaking News

மே 10 ம் தேதி 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் பள்ளிகல்விதுறை 10th result 2024

அட்மின் மீடியா
0

மே 10 ம் தேதி 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் பள்ளிகல்விதுறை

ஏற்கனவே அறிவித்தப்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. 

இதில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதியுள்ளனர். 

இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும், மே 10ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

10-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளை, 

http://tnresults.nic.in 

http://dge1.tn.nic.in 

http://dge2.tn.nic.in 

http://dge.tn.nic.in 

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback