மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றம் Traffic Diversion at OMR
சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.\
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் கந்தன்சாவடி சாலையில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
இது குறித்து வெளியான செய்திகுறிப்பில்:-
சென்னை மெட்ரோ இரயில் கட்டுமான பணி காரணமாக OMR சாலையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தினர் தனது கட்டுமான பணியினை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் கந்தன்சாவடி சாலையில் மேற்கொள்ள உள்ளதால், பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றமானது வருகின்ற 30.03.2024 முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் வேளச்சேரி நோக்கி SRP சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் YMCA முன்பு புதிய "யு" திருப்பம் செய்து, SRP சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி தங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.
வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Traffic Diversion due to CMRL Work at OMR.
In view of the proposed Taramani & Kanthanchavadi Metro Station construction work (CMRL) on Old Mahabalipuram Road, the following road diversions will be implemented on trial basis from 30.03.2024 for one week.
➤ Vehicles coming from Adyar and Thiruvanmiyur are restricted to take right turn at SRP tools junction towards Velachery. Instead, they will proceed further and take New U turn in front of YMCA and take free left turn at SRP tools junction to reach Velachery.
Motorists and public are requested to co-operate.
Tags: தமிழக செய்திகள்
