இனி ஆட்டோ மற்றும் டாக்சி புக்செய்ய TATO ஆப் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
இனி ஆட்டோ மற்றும் டாக்சி புக்செய்ய TATO ஆப் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள பெருநகரங்களில் OLA மற்றும் Uber போன்ற தனியார் ஆட்டோ மற்றும் டாக்ஸி புக்கிங் செய்வதால் பலருக்கும் வருமானம் பாதிக்கபப்டுவதால் தனியார் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள்கள் அரசு சார்பில்புதிய செயலி இதற்காக உருவாக்கப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களை களையெடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதன் அடிப்படையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
அந்தக் கூட்டத்தில், போக்குவரத்து துறை அதிகாரிகள் "Taxi'na" என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கும், ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தினருக்கும் கூட்டம் நடைபெற்றது.. அதில், ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய செயலி உருவாக்குவது ” குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி Taxi'na குழு முதன்மை செயலாளர் “அந்த செயலியை உருவாக்கும் விதம், ஆட்டோ, டாக்சி பதிவிடுவது குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அந்தக் கூட்டத்தில், தனியார் நிறுவனம் இதற்கான செயலியை உருவாக்கி நிர்வாகிக்கலாம் என்றும், அதன் முழு கட்டுப்பாடு தமிழக அரசின் கீழ் செயல்பட வேண்டும் ”எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, "TATO" என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டு இந்நிறுவனம் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஓட்டுநர்கள் அல்லது பயணிகளிடமிருந்து அந்நிறுவனம் எந்தக் கமிஷனையும் வசூலிக்கக் கூடாது எனவும், மக்களுக்கும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நியாயமான முறையில் கட்டணம் மற்றும் வருமானம் நிர்ணயம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்
