Breaking News

ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி உயிரிழந்தார் முழு விவரம் Tamil Nadu MDMK MP Ganeshamurthi died

அட்மின் மீடியா
0

ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி மாரடைப்பால் காலமானார்.

கடந்த 2019ம் ஆண்டு ஈரோடு மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கணேச மூர்த்தி, இந்நிலையில் மார்ச் 24 ஆம் தேதி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்


ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இந்த முறை ஈரோடு தொகுதியை தி.மு.க., எடுத்துக் கொண்டது. இதனால் கணேசமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இந்நிலையில் நேற்று மார்ச் 24 அவரது வீட்டில் தென்னை மரத்திற்க்கு  வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடல்நலன் பாதிக்கப்பட்ட அவர், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்துப் பேசிய துரை வைகோ, ‘‘நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறினர்.அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். 48 மணி நேரத்திற்கு பின் தான் அவரது உடல் நிலை குறித்து சொல்ல முடியுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,’ என்றார்.

கோவையில் எம்.பி. கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு வைகோ நேரில் சென்று நலம் விசாரித்தார். இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தார்

இந்நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback