எல்லையில் ஊடுருவ முயன்ற தமிழக எஸ்எஸ்ஐ கைதுசெய்த வங்க தேச ராணுவம் முழு விவரம் Tamil Nadu cop detained in Bangladesh
எல்லையில் ஊடுருவ முயன்ற தமிழக எஸ்எஸ்ஐ கைதுசெய்த வங்க தேச ராணுவம் முழு விவரம் Tamil Nadu cop detained in Bangladesh
திருச்சியை சேர்ந்த ஜான் செல்வராஜ். சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்
இந்நிலையில்கடந்த 19ம் தேதி விடுப்பு எடுத்துசென்ற ஜான் செல்வராஜ். வங்கதேச எல்லையில் அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வங்கதேசம் ஜானியாபாத் என்ற இடத்தில் வங்கதேச ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய எல்லையில் இருந்து சட்டவிரோதமாக வங்கதேசத்தில் நுழைந்த சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை ராணுவத்தினர் கைது செய்தனர்.அந்த நபரின் உடமைகளை வங்கதேச ராணுவத்தினர் சோதனை செய்த போது அதில் தமிழ்நாடு காவல்துறை அடையாள அட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது ராணுவ அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக மாநில காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறப்பு உதவி ஆய்வாளர் குற்றவாளிகளுடன் ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாரா, அவருக்கு சர்வதேச சட்டவிரோத கும்பலுடன் பழக்கம் இருக்கிறதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: இந்திய செய்திகள்
