Breaking News

எஸ்.டி கொரியர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை st courier

அட்மின் மீடியா
0

எஸ்.டி. கொரியர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை; பம்மல் மற்றும் பல்லாவரத்தில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது

சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்.டி கொரியர் தலைமை அலுவலகத்தில் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 


எஸ்.டி கொரியர் நிறுவனம் ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரி என்பவருக்கு சொந்தமானதாகும். 

கொரியர் நிறுவனத்தின் மூலம் பொருட்கள் எதுவும் சட்டவிரோதமாக கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் மீண்டும் நவாஸ் கனி போட்டியிடுகிறார். இந்த சூழ்நிலையில் அவரது சகோதரர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback