Breaking News

அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் SDPI கட்சி சார்பாக நெல்லை முபாரக் இரட்டை இலை சின்னத்தில் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் SDPI கட்சி சார்பாக நெல்லை முபாரக் இரட்டை இலை சின்னத்தில் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

SDPI Candidates List For Lok Sabha Elections 2024 மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.


நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடக்கும் தேர்தலில் முதல்கட்டமாக தமிழகம் புதுச்சேரி யில் ஏப்ரல் 19ஆம் தேதிவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது,உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.

திமுக கூட்டணி:-

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.தொகுதி பங்கீடுகளும் முடிந்து தமிழ்நாடு-புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

பாஜக கூட்டணி:-

தமிழ்நாட்டில் பாஜக மெகா கூட்டணிக்கான பணியை செய்து வந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ்,இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பாமக, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அதிமுக கூட்டணி:-

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்த நிலையில் 

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் தேமுதிக , எஸ்டிபிஐ, அகில இந்திய பார்வர்டு பிளாக், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது

எஸ்டிபிஐ கட்சி

எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் SDPI கட்சி சார்பாக நெல்லை முபாரக் இரட்டை இலை சின்னத்தில் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது

புதிய தமிழகம்

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது


https://twitter.com/sdpitnhq/status/1770395899140952122

அதிமுக முதற்கட்டமாக 16 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது அதில்

வட சென்னை நாடாளுமன்ற தொகுதி - ராயபுரம் ஆர்.மனோ அவர்களுக்கு வங்கப்பட்டுள்ளது.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி - டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் அவர்களுக்கு வங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி - ராஜசேகர் அவர்களுக்கு வங்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி - ஏ.என்.விஜயன் அவர்களுக்கு வங்கப்பட்டுள்ளது.

ஆரணி நாடாளுமன்ற தொகுதி - கஜேந்திரன்  அவர்களுக்கு வங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி - ஜெயபிரகாஷ் அவர்களுக்கு வங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி - பாக்யராஜ் அவர்களுக்கு வங்கப்பட்டுள்ளது.

சேலம் நாடாளுமன்ற தொகுதி- விக்னேஷ் அவர்களுக்கு வங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி - கவிமணி அவர்களுக்கு வங்கப்பட்டுள்ளது.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி - ஆற்றல் அசோக்குமார் அவர்களுக்கு வங்கப்பட்டுள்ளது.

கரூர் நாடாளுமன்ற தொகுதி - தங்கவேல் அவர்களுக்கு வங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி - சந்திரஹாசன் அவர்களுக்கு வங்கப்பட்டுள்ளது.
  
மதுரை நாடாளுமன்ற தொகுதி - சரவணன் அவர்களுக்கு வங்கப்பட்டுள்ளது.

தேனி நாடாளுமன்ற தொகுதி- நாராயணசாமி அவர்களுக்கு  வங்கப்பட்டுள்ளது.

நாகை நாடாளுமன்ற தொகுதி - சுர்ஜித் சங்கர் அவர்களுக்கு வங்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி - ஜெயபெருமாள் அவர்களுக்கு வங்கப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback