Breaking News

ரமலான் பஜர் தொழுகையில் ஒவ்வொரு முஸ்லீமும் செய்ய வேண்டியது என்ன - ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு Qunoot-e-Naazilah dua

அட்மின் மீடியா
0

ரமலான் மாதம் ஜமா அத்துல் உலமா சபை


குனூத்துன் நாஜிலா

கண்ணியத்திற்குரிய ஆலிம்பெருமக்கள் மற்றும் நிர்வாகப்பெருமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... மஸ்ஜிதுகளின்

பொதுசிவில் சட்டம், குடியுரிமை திருத்தச் ஆபத்துகளால் இந்திய முஸ்லிம்களின் சட்டம் முதலிய வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. புனிதப்பள்ளிவாசல்களில் ஒன்றான அல்மஸ்ஜிதுல் அக்ஸாவைத் தாங்கி நிற்கும் பலஸ்தீனில் காஸா உள்ளிட்ட பகுதிகள் பூலோக நரகமாக்கப்பட்டிருக்கிறது. இழப்புகளைக்கூட வெளிப்படையாக சொல்ல இயலாத நிர்பந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இவை குறித்து கடந்த 05.03.2024 அன்று மதுரை தாருல் உலமாவில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் விவாதிக்கப்பட்டதில் சுமூகமான அமைதி வாழ்வு நிலவிட நம்மைப்படைத்த இறைவனிடம் உதவி தேடுவதற்கு ஏற்ற மாதமான வரும் ரமழான் முழுவதும் ஒரு மாதம் மட்டும்) இன்ஷா அல்லாஹ் தினமும் பஜ்ர் தொழுகையில் குனூத்தே நாஜிலாவை ஒரு மாதத்திற்கு ஓதுவது என தீர்மானிக்கப்பட்டது.

ஆதலால், அனைத்து இமாம்களும் தங்கள் மஸ்ஜிதுகளில் வரும் ரமழான் முதல் நாளிலிருந்து குனூத்தே நாஜிலாவை தொடங்கிவிடுமாறும் ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட நிர்வாகிகள் தங்கள் மாவட்டம் முழுவதும் குனூத்தே நாஜிலா நடைபெறுவதை உறுதிசெய்யுமாறும் கேட்டுக்கொள்கிறாம்.

குனூத்தே நாஜிலா

குனூத்தே நாஜிலா என்பது விரோதிகளின் சூழ்ச்சிகளிலிருந்தும், தீங்கிலிருந்தும், அவர்கள் மூலம் இஸ்லாமிய உம்மத்திற்கு ஏற்படும்

ஆபத்துகளிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு மற்றும் உதவியை வேண்டும் சுன்னத்தான துஆ

1. நபி (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் ஃபஜ்ருடைய தொழுகையில் ஓதியுள்ளார்கள்.

2. சோதனைகள் நீங்கி சாதகமான சூழல் ஏற்படுகிற வரை ஓதலாம் என்பது இமாம்களின் கூற்று.

3. ஃபஜ்ருடைய தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் ருகூவிற்கு பின்பு நின்ற நிலையில் ஓத வேண்டும்.

4. ஹனபி மத்ஹபில், குனூத்தே நாஜிலாவிற்காக கைகளை உயர்த்தாமல் தொங்கவிட வேண்டும். மேலும், இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும். பின்பற்றி தொழும் மக்கள் மெதுவாக ஆமீன் சொல்ல வேண்டும்.

5. ஷாஃபிஈ மத்ஹபில் வழக்கமான முறைதான். துஆ மட்டும் கூடுதலாக ஓதப்படும்.

குனூத்தே நாஜிலா துஆ

اللَّهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لَنَا فِيمَا أَعْطَيْتَ وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ إِنَّهُ لَا يَذِلُّ مَن وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ نَسْتَغْفِرُكَ وَنَتُوْبُ إِلَيْكَ وَصَلَّى اللَّهُ عَلَى النَّبِيِّ الكَرِيمِ اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَأَلِفُ بَيْنَ قُلُوبِهِم وَأَصْلِحُ ذَاتَ بَيْنِهِمْ وَانْصُرْهُمْ عَلَى عَدُوِّكَ وَعَدُوِّهِمْ اللَّهُمَّ قَاتِلِ الْكَفَرَةَ الَّذِينَ يَجْحَدُونَ آيَاتِكَ وَيُكَذِّبُونَ رُسُلَكَ وَيَصُدُّونَ عَنْ سَبِيلِكَ وَيُقَاتِلُونَ أَوْلِيَاءَكَ اللَّهُمَّ انْصُرِ الإِسْلامَ وَالْمُسْلِمِينَ وَاخْذُلْ أَعَدَاتَهُمُ الْيَهُودَ وَالنَّصَارَى وَالْمُشْرِكِينَ اللَّهُمَّ شَيْتْ شَمْلَهُمْ وَمَزْقُ جَمْعَهُمْ وَخَالِفُ بَيْنَ كَلِمَتِهِمْ وَامْحُ آثَارَهُمْ وَاقْطَعْ دَابِرَهُمْ وَأَنْزِلُ بِهِمْ بَأْسَكَ الَّذِي لَا تَرُدُّهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ. اَللَّهُمَّ أَهْلِكُهُمْ كَمَا أَهْلَكْتَ عَادًا وَثَمُوْدًا اللَّهُمَّ خُذْهُمْ أَخْلَ

عَزِيزِ 

ரமலானில் துஆ

கண்ணியத்திற்குரிய ஆலிம் பெருமக்களுக்கும் அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்று முஸ்லிம்களின் நிலை உலக அளவிலும் இந்திய அளவிலும் மகிழ்ச்சி அளிக்கும் நிலையில் இல்லை. பலஸ்தீனில் நமது சகோதரர்கள் சொல்ல முடியா துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் நேரடியான மறைமுகமான பல்வேறு அச்சுறுத்தலுக்கு இந்திய முஸ்லிம்கள் உள்ளாகி இருக்கிறோம். இந்நிலைகள் அனைத்தும் நாம் அனைவரும் தெளிவாக அறிந்ததுதான்.

பொதுச்சிவில் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவை தலை மேல் கத்தியாக இருக்கிறது. மக்கள் தொகையில் 20 சதவீதம் உள்ள சமுதாயம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை பொதுச் சமூகம் மௌனமாக வேடிக்கை பார்க்கும் நிலையில் அல்லாஹ் இடத்தில் மீள்வதை தவிர்த்து மூமின்களாகிய நமக்கு வேறு வழி இல்லை.

ஆதலால் துஆ ஒப்புக்கொள்ளப்படுகின்ற புனிதம் நிறைந்த ரமலானை குறிப்பாக இப்தார் மற்றும் ஸஹர் நேரத்தை துஆவிற்காக நாம் பயன்படுத்திக் கொள்வது மிக அவசியமாகும்.

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

(லா இலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மினள் ளாலிமீன்) என்ற தஸ்பீஹை 40 முறையும்

يَا جَبَّارُ يَا قَهَّارُ )númή we sei(

70 முறையும் ஓதிவிட்டு அல்லாஹ்விடத்தில் அழுது மன்றாடி துஆச் செய்யுமாறு அனைத்து முஃமின்களான ஆண்களையும் பெண்களையும் கேட்டுக் கொள்கின்றோம். என ஜமா அத்துல் உலமா சபை அறிவித்துள்ளது

Tags: மார்க்க செய்திகள்

Give Us Your Feedback