பாமக தேர்தல் அறிக்கை டவுன்லோடு செய்ய Pmk manifesto 2024 pdf download
பாமக தேர்தல் அறிக்கை டவுன்லோடு செய்ய Pmk manifesto 2024 pdf download
நாடாளுமன்ற தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று காலை வெளியிட்டார்.
முக்கிய வாக்குறுதிகள்:
₹10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உறுதி செய்யப்படும்
மத்திய அரசின் வரி வருவாய் மற்றும் மானியத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்
அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்படும்
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவோம்
மாநில அரசுகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்
21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்திற்கு இருதரப்புப் பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்
இடஒதுக்கீட்டுக்கான 50% உச்ச வரம்பை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
கல்வி, வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்படும்
ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்
60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை
கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்
மேலும் விவரங்களுக்கு pdf download செய்ய இங்கு கிளிக் செய்ய
https://drive.google.com/file/d/1jjXJRSErFmu9voim4xDTaQyDyOlRQgBM/view
Tags: அரசியல் செய்திகள்
