Breaking News

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியம்.! குடியரசு தலைவரிடம் அறிக்கை தாக்கல்.! One Nation One Election

அட்மின் மீடியா
0

மார்ச் 14- டெல்லி:- மக்களவை தேர்தலோடு, மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. 


இந்த ஆய்வறிக்கையை இன்று ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அளித்துள்ளது. மொத்தம் 18,626 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் பவனில் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த அறிக்கையில்:-

ஒரே நேரத்தில் மக்களவை, மாநில சட்டசபைகளுக்கு தேர்தலை நடத்தி, அதை தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை 2வது கட்டமாக நடத்தலாம் என ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளன. 

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback