ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவரை கைது செய்தது NIA
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சபீரை பெல்லாரியில் வைத்து கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், கைதான சபீர் முக்கிய குற்றவாளி இல்லை என்றும், வெடிகுண்டு வைத்தவருக்கு உதவியவர் எனவும் தகவல்
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி குறித்துத் தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும்- தேசிய புலனாய்வு முகமை (NIA) அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, இந்திரா நகரில் ராமேஸ்வரம் கஃபே என்ற ஹோட்டல் இயங்கி வருகிறது. இன்று (01.03.2024) திடீரென அக்கடையில் இருந்து பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. வெடி விபத்தில் குறைந்தது 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மூன்று ஊழியர்களும் ஒரு வாடிக்கையாளர்களும் அடங்குவர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர், சிலிண்டர் வெடித்து கஃபே மற்றும் அதைச் சுற்றி கறுப்புப் புகையை ஏற்படுத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்த நிலையில்
ராமேஸ்வரம் கஃபேவில் வெடித்தது வெடிகுண்டு தான் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உறுதி செய்துள்ளார். வாடிக்கையாளர் போல வந்தவர் வைத்திருந்த பையில் இருந்த வெடிகுண்டு தான் வெடித்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் விளக்கமளித்தனர்.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி குறித்துத் தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும்- தேசிய புலனாய்வு முகமை(NIA) அறிவித்திருந்தது
இந்நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகத்துக்குரிய நபராக தேடப்பட்டு வந்த முகமது ஷபீர் என்பவரை பெல்லாரியில் கைது செய்தது தேசிய புலனாய்வு முகமை அவரிடம் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றார்கள்
குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியின் நெருங்கிய நண்பர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.ஷபீருக்கும், ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த தினத்தன்று, முக்கிய குற்றவாளியுடன் பலமுறை மொபைல் போனில் பேசியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
Tags: இந்திய செய்திகள்
