மோசடி புகாரில் MY 3 ADS நிறுவனர் விஜயராகவன் கைது முழு விவரம்!
மோசடி புகாரில் MY 3 ADS நிறுவனர் விஜயராகவன் மதுரையில் கைது!
கோவையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் MY V3 ADS நிறுவனம், செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் கிடைக்கும் என ஆசைக்காட்டி பொதுமக்களிடம் பண மோசடி செய்ததாக மோசடி புகாரில் V3 யூடியூப் சேனல் உரிமையாளர் விஜயராகவன் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 18,000 முதலீடு செய்தால் மாதம் ரூ.76,000 லாபம் கிடைக்கும் என பலரை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
MYV3 ADS உரிமையாளர் சக்தி ஆனந்தனின் நெருங்கிய நண்பரான விஜயராகவன், தனது நிறுவனம் நேர்மையானது என மத்திய அரசு சான்றளித்தது போல் போலி ஆவணம் தயாரித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த விஜயராகவனை கோவை மாவட்ட பொருளாதாக்குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரை விசாரணைக்கு போலீஸார் அழைத்த போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து மதுரை உத்தங்குடியில் தனியார் மருத்துவமனையில் அவரை போலீஸார் அனுமதிக்கப்பட்டார்
Tags: தமிழக செய்திகள்
