ஹரியானாவில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது! முதல்வர் ராஜினாமா Manohar Lal Khattar likely to resign as Haryana CM
ஹரியானா அரசியலில் திடீர் திருப்பமாக அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகினர்.
ஹரியானாவில் பாஜக, மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்துள்ளது. அதன்படி, முதலமைச்சர் மட்டுமின்றி பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகினர்.
கூட்டணி ஆட்சியில் ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா ஹரியானா துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.மக்களவை தேர்தலுக்கு முன் ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி கவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் உள்ளிட்ட மூன்று எம்பிக்கள் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
