Breaking News

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி! Mamata Banerjee Suffered Major Injury

அட்மின் மீடியா
0

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி! வைரல் போட்டோக்கள்



மார்ச் 14- கொல்கத்தா:- மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி! வைரல் போட்டோக்கள்

திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது நெற்றியில் இரத்தம் வழிகிற படங்கள் வெளியாகியுள்ளது. 

காயம் ஆழமாக ஏற்பட்டுள்ளதை படங்கள் காட்டுகின்றன.அவர் வீட்டில் காயமுற்றதாகவும் கல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் பலத்த காயம் அடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் விபத்து எப்படி நடந்தது என்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை

திரினாமுல் காங்கிரஸ் கட்சி டிவிட்டர் பக்கத்தில் 

நமது தலைவர் மம்தா பானர்ஜிக்கு பெரியளவில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்காக பிரார்த்தியுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

திரினாமுல் காங்கிரஸ் கட்சி டிவிட்டர்  பதிவு பார்க்க

https://twitter.com/AITCofficial/status/1768286010264502610

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback