Breaking News

நாடாளுமன்ற தேர்தல் திமுக வேட்பாளர்கள் பட்டியல் எந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர் முழு விவரம் lok sabha election 2024 dmk candidate list

அட்மின் மீடியா
0

நாடாளுமன்ற தேர்தல் திமுக வேட்பாளர்கள் பட்டியல் எந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர் முழு விவரம் lok sabha election 2024 dmk candidate list


மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 

நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடக்கும் தேர்தலில் முதல்கட்டமாக தமிழகம் புதுச்சேரி யில் ஏப்ரல் 19ஆம் தேதிவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, கொங்குநாடு, முஸ்லீம் லீக்,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை  முடித்து எஞ்சிய தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோவை, பொள்ளாச்சிசேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி தூத்துக்குடி ஆகிய 21 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் களம் காணவுள்ளனர்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலையொட்டி 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை மற்றும் தேர்தல் அறிக்கையை சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார், அதன்படி 

திமுக கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

சென்னை வடக்கு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக கலாநிதி வீராசாமி களம் இறக்கப்பட்டுள்ளார்

சென்னை தெற்கு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன்  களம் இறக்கப்பட்டுள்ளார்

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தயாநிதி மாறன்  களம் இறக்கப்பட்டுள்ளார்

காஞ்சிபுரம் ( தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக செல்வம் களம் இறக்கப்பட்டுள்ளார்

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ஜெகத்ரட்சகன் களம் இறக்கப்பட்டுள்ளார்

வேலூர் நாடாளுமன்ற  தொகுதி வேட்பாளராக  கதிர் ஆனந்த் களம் இறக்கப்பட்டுள்ளார்

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக  அ.மணி களம் இறக்கப்பட்டுள்ளார்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக சி.என்.அண்ணாதுரை  களம் இறக்கப்பட்டுள்ளார்

சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக செல்வ கணபதி  களம் இறக்கப்பட்டுள்ளார்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மலையரசன் களம் இறக்கப்பட்டுள்ளார்

நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ஆ.ராசா களம் இறக்கப்பட்டுள்ளார்

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக கே.ஈஸ்வரசாமி களம் இறக்கப்பட்டுள்ளார்

கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக  கணபதி ராஜ்குமார் களம்  இறக்கப்பட்டுள்ளார்

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக  ச.முரசொலி களம் இறக்கப்பட்டுள்ளார்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக  கனிமொழி கருணாநிதி களம் இறக்கப்பட்டுள்ளார்

தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ராணி ஸ்ரீ குமார்  களம் இறக்கப்பட்டுள்ளார்

ஸ்ரீபெரம்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக டி.ஆர்.பாலு களம் இறக்கப்பட்டுள்ளார்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அருண் நேரு களம் இறக்கப்பட்டுள்ளார்

தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக  தங்க தமிழ்செல்வன் களம் இறக்கப்பட்டுள்ளார்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக  பிரகாஷ் களம் இறக்கப்பட்டுள்ளார்

ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக  தரணி வேந்தன் களம் இறக்கப்பட்டுள்ளார்

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை

✦ திருவள்ளூர் (தனி) (காங்) 
✦ கடலூர் (காங்)
✦ மயிலாடுதுறை (காங்)
✦ சிவகங்கை (காங்)
✦ திருநெல்வேலி (காங்)
✦ கிருஷ்ணகிரி (காங்)
✦ கரூர் (காங்)
✦ விருதுநகர் (காங்)
✦ கன்னியாகுமரி (காங்)
✦ புதுச்சேரி (காங்)

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

✦ சிதம்பரம் (விசிக)  தொகுதியில் தொல்.திருமாவளவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

✦ விழுப்புரம் (விசிக)  தொகுதியில் ரவிக்குமார்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

மார்க்கிஸ்ஸிட் கம்யூனிஸ்ட்  போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

✦ மதுரை (சிபிஎம்)  தொகுதியில் சு.வெங்கடேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

✦ திண்டுக்கல் (சிபிஎம்) தொகுதியில் சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

இந்திய கம்யூனிஸ்ட்  போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

✦ திருப்பூர் (சிபிஐ)  திருப்பூர் தொகுதியில் சுப்பராயன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

✦ நாகப்பட்டினம் (சிபிஐ) தொகுதியில் செல்வராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

கொங்கு நாடு மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

✦ நாமக்கல் (கொமதேக) தொகுதியில் சூர்யமூர்த்தி வேட்பாளராக களம் இறங்குகின்றார்

மதிமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

✦ திருச்சி (மதிமுக)  தொகுதியில் துரை வைகோ வேட்பாளராக களம் இறங்குகின்றார்

இந்திய முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

✦ ராமநாதபுரம் (ஐயூஎம்எல்) தொகுதியில் நவாஸ்கனி  வேட்பாளராக களம் இறங்குகின்றார்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback