நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் முழு விவரம் lok sabha election 2024 congress candidate list
மக்களவைத் தேர்தல்: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள 7 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள், மயிலாடுதுறை , திருநெல்வேலி தொகுதி வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது காங்கிரஸ்.
மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடக்கும் தேர்தலில் முதல்கட்டமாக தமிழகம் புதுச்சேரி யில் ஏப்ரல் 19ஆம் தேதிவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, கொங்குநாடு, முஸ்லீம் லீக்,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை முடித்து எஞ்சிய தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோவை, பொள்ளாச்சிசேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி தூத்துக்குடி ஆகிய 21 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் களம் காணவுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்
✦ திருவள்ளூர் (தனி) (காங்) தொகுதி வேட்பாளராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ கடலூர் (காங்) தொகுதி வேட்பாளராக விஷ்னு பிரசாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ மயிலாடுதுறை (காங்) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ சிவகங்கை (காங்) தொகுதி வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ திருநெல்வேலி (காங்) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ கிருஷ்ணகிரி (காங்) தொகுதி வேட்பாளராக கோபிநாத் அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ கரூர் (காங்) தொகுதி வேட்பாளராக ஜோதிமணி அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ விருதுநகர் (காங்) தொகுதி வேட்பாளராக மாணிக்கம் தாகூர் அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ கன்னியாகுமரி (காங்) தொகுதி வேட்பாளராக விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ புதுச்சேரி (காங்) தொகுதி வேட்பாளராக வைத்திய லிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார்
இந்நிலையில் மக்களவைத் தேர்தலையொட்டி 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை மற்றும் தேர்தல் அறிக்கையை சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார், அதன்படி
திமுக கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்
✦சென்னை வடக்கு தொகுதியில் கலாநிதி வீராசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்
✦சென்னை தெற்கு தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார்
✦மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ காஞ்சிபுரம் ( தனி) தொகுதியில் செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ தருமபுரி தொகுதியில் அ.மணி அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ திருவண்ணாமலை தொகுதியில் சி.என்.அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ சேலம் தொகுதியில் செல்வ கணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ கள்ளக்குறிச்சி தொகுதியில் மலையரசன் அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ நீலகிரி (தனி) தொகுதியில் ஆ.ராசா அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ பொள்ளாச்சி தொகுதியில் கே.ஈஸ்வரசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ கோவை தொகுதியில் கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ தஞ்சாவூர் தொகுதியில் ச.முரசொலி அறிவிக்கப்பட்டுள்ளார்
✦தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி கருணாநிதி அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ தென்காசி (தனி) தொகுதியில் ராணி ஸ்ரீ குமார்
✦ ஸ்ரீபெரம்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ பெரம்பலூர் தொகுதியில் அருண் நேரு அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ தேனி தொகுதியில் தங்க தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ ஈரோடு தொகுதியில் பிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ ஆரணி தொகுதியில் தரணி வேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார்
விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்
✦ சிதம்பரம் (விசிக) தொகுதியில் தொல்.திருமாவளவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ விழுப்புரம் (விசிக) தொகுதியில் ரவிக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
மார்க்கிஸ்ஸிட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்
✦ மதுரை (சிபிஎம்) தொகுதியில் சு.வெங்கடேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ திண்டுக்கல் (சிபிஎம்) தொகுதியில் சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்
✦ திருப்பூர் (சிபிஐ) திருப்பூர் தொகுதியில் சுப்பராயன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
✦ நாகப்பட்டினம் (சிபிஐ) தொகுதியில் செல்வராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
கொங்கு நாடு மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்
✦ நாமக்கல் (கொமதேக) தொகுதியில் மாதேஷ்வரன் வேட்பாளராக களம் இறங்குகின்றார்
மதிமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்
✦ திருச்சி (மதிமுக) தொகுதியில் துரை வைகோ வேட்பாளராக களம் இறங்குகின்றார்
இந்திய முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்
✦ ராமநாதபுரம் (ஐயூஎம்எல்) தொகுதியில் நவாஸ்கனி வேட்பாளராக களம் இறங்குகின்றார்