Breaking News

இ-சேவை மையங்கள் மூலமாக இனி LLR விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
இ-சேவை மையங்கள் மூலமாக இனி LLR விண்ணப்பிக்கலாம் முழு விவரம்




இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு (LLR) விண்ணப்பிக்கலாம் என - மாநில போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இ-சேவை மையங்கள் மூலம் எல்.எல்.ஆர். விண்ணப்பிக்கும் முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. 

வாகனம் ஓட்ட பழகுநர் உரிமம் (LLR) பெற இ-சேவை மையங்களில் கூடுதலாக ரூ.60 கட்டணம் செலுத்த வேண்டும். 

இனி இ-சேவை மையங்கள் மூலமாகவும் LLR (வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

தற்போது LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் Browsing Centre களையும் பொதுமக்கள் அனுகவேண்டிய நிலை உள்ளது. இதில் தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இந்த முறையில் வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை உள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காகவும், இது குறித்து எந்த வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் இதனை மேம்படுத்துவதற்கும். நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கும், தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.

அதனடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சரின் ஆணைப்படியும், மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இனி மாநிலம் முழுவதிலுமுள்ள 55,000 க்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் இந்த LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பிக்கும் முறை நாளை முதல் (13.03.2024) நடைமுறைக்கு வருகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback