வீட்டிற்க்குள் திடீரென வந்த சிறுத்தை, புத்திசாலித்தனமாக தப்பிய சிறுவன் வைரல் சிசிடிவி வீடியோ Leopard suddenly entered a house
வீட்டிற்க்குள் திடீரென வந்த சிறுத்தை புத்திசாலித்தனமாக தப்பிய சிறுவன் வைரல் சிசிடிவி வீடியோ Leopard suddenly entered a house
வீட்டிற்க்குள் திடீரென வந்த சிறுத்தை புத்திசாலித்தனமாக தப்பிய சிறுவன் வைரல் சிசிடிவி வீடியோ Leopard suddenly entered a house புத்திசாலித்தனமாக கதவைப் பூட்டிவிட்டு தப்பியோடிய சிறுவன் சிறுவனின் தந்தை அந்த மண்டபத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் மாலேகான் நகரில்,ஜாஜுவாடி பகுதி நம்பூர் சாலையில் உள்ள பைகானில் உள்ள தனது தந்தை காவலராக பணியாற்றும் திருமண மண்டபத்திற்க்கு தந்தையை பார்க்க வந்த சிறுவன் கைத்தொலைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்த போது, மண்டபத்தின் பிரதான கதவு திறந்திருந்த நிலையில் சிறுவன் அமர்ந்திருந்த அறைக்குள் சிறுத்தை நுழைந்தது
இதனை சற்றும் எதிர்பாரத சிறுவன் சிறுத்தையை பார்த்து அலறாமல் , பயப்படாமல் புத்திசாலிதனமாக வெளியே வந்த சிறுவன் உடனடியாக கதவை பூட்டிக்கொண்டான். வெளியே வந்த சிறுவன் சத்தம் போட்டதால், அப்பகுதி மக்கள் விரைந்து வந்து கேட்க சிறுவன் சிறுத்தை வந்ததை கூறினான் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து, அப்பகுதி போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர் இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகில் உள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/sirajnoorani/status/1765307539393266164
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
