Breaking News

புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி, பாலியல் பலாத்கார முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலம் - இருவர் அதிரடி கைது Justice for Arthi

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி, பாலியல் பலாத்கார முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலம்  - இருவர் அதிரடி கைது

புதுச்சேரி சோலை நகரில் 4 நாட்கள் முன்பு காணாமல் போன 9 வயது சிறுமி, கால்வாயில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலம்!

சந்தேகத்தின்பேரில்  அப்பகுதியில் உள்ள 2 நபர்களிடம் விசாரித்ததில், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டபோது உயிரிழந்துவிட்டதாகவும் சடலத்தை சாக்குப் பையில் போட்டு கால்வாயில் வீசியதாகவும் வாக்குமூலம்.  அளித்துள்ளார்கள்

புதுச்சேரி மாநிலம், சோலைநகர் பகுதியைச் சேர்ந்த நாராயணன்- மைதிலி தம்பதியின் இரண்டாவது மகள் ஆர்த்தி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார்.


கடந்த சனிக்கிழமை மாலை தனது வீட்டின் அருகே விளையாடச் சென்றவா் அதன்பின் வீடு திரும்பவில்லையாம்.இதையடுத்து, அவரது பெற்றோர், உறவினா்கள் மற்றும் சிறுமியின் தோழிகளின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மாயமான சிறுமியைத் தேடி வந்தனர். 

இந்த நிலையில், காணாமல் போன சிறுமியை அப்பகுதியில் உள்ள வீடுகளில் காவல்துறையினர் தேடி வந்தனர்மேலும், சோலைநகர் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த அனைத்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் இரு தினங்களுக்கு முன்பு சோலைநகர் பொதுமக்கள்  முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் புதுச்சேரியில் மாயமான பெண் குழந்தை வீட்டின் அருகே இருந்த வாய்க்காலில் இறந்த நிலையில் கண்டெடுப்பு, சிறுமியை கண்டுபிடுத்து தரவேண்டுமென உறவினர்கள் கோரிய நிலையில், வீட்டின் அருகில் உள்ள சாக்கடையில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது

உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில்  பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலம்!

சந்தேகத்தின்பேரில்  அப்பகுதியில் உள்ள கருணாஸ் (19), விவேகானந்தன் (57)  2 நபர்களிடம் விசாரித்ததில், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டபோது உயிரிழந்துவிட்டதாகவும் சடலத்தை சாக்குப் பையில் போட்டு கால்வாயில் வீசியதாகவும் வாக்குமூலம்.  அளித்துள்ளார்கள்

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback