Justice Fernanda ஜார்கண்ட்டில் கொடூரம் சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டு பெண்ணை கணவர் கண் முன்னே கூட்டு பலாத்காரம் செய்த 7 பேர் கொண்ட கும்பல்! முழு விவரம்
ஜார்கண்ட்டில் கொடூரம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டு பெண்ணை கணவர் கண் முன்னே கூட்டு பலாத்காரம் செய்த 7 பேர் கொண்ட கும்பல்! முழு விவரம்
ஆசிய நாடுகளை சுற்றிப் பார்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் பைக் ரைடைத் திட்டமிட்டிருந்தனர். ஆசிய நாடுகளில் பைக்கில் சென்று தங்களுக்கு பிடித்தமான இடங்களில் சுற்றி பார்த்து வந்த இந்த தம்பதியினர் பல்வேறு நாடுகள் சுற்றி நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து, பீகார் வழியாக ஜார்கண்ட் வந்துள்ளனர்.
கடந்த 1ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் உள்ள ஹன்ஸ்திஹா காவல் நிலையப் பகுதியில் இரவு நேரத்தை கழிக்க நினைத்த அவர்கள், இதற்காக அப்பகுதியில் ஒரு தற்காலிக கூடாரம் அமைத்து தங்கினர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கும்பல், வெளிநாட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற பெண்ணின் கணவரையும் அவர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்
அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வெளிநாட்டு பயணிகள் இருவரும் சாலையோரத்தில் இருந்ததை பார்த்தனர். ரத்த காயங்களுடம் இருந்த இருவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்போது தான், அந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், இந்த வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதுடன், எஞ்சியவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/bihar_newspoint/status/1764346067817029706
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/Hereprak/status/1763979966310703191
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ
