சி.ஏ.ஏ.-வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனு! Indian Union Muslim League Moves Supreme Court Citizenship Amendment Act
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனு தக்கல் செய்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்க விதிகள் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். குடியுரிமையை மதத்துடன் இணைப்பதன் மூலம், அது மத பாகுபாட்டிற்கு வழிவகுக்கிறது. எனவே சிஏஏ அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்தி
