இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு முழு விவரம் indian communist party candidates in tamilnadu
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9, புதுச்சேரி 1 என காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மேலும் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது அதன்படி மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
இந்நிலையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நாகை, தொகுதியில் செல்வராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட திருப்பூர் தொகுதியில் சுப்பராயன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
Tags: அரசியல் செய்திகள்
