சிஏஏ குடியுரிமை பெற தனி இணையதளம் தொடக்கம்! விண்ணப்பிப்பது எப்படி ? How To Apply For Indian Citizenship Under CAA Act 2019 On Online Portal
சிஏஏ குடியுரிமை பெற தனி இணையதளம் தொடக்கம்!
இந்தியாவில் 2019ல் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் சிறுபான்மையாக வசித்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
மேலும் மத அடிப்படையிலான துன்புறுத்தல் அல்லது மத அடிப்படையிலான துன்புறுத்தல் குறித்த பயம் காரணமாக 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு இந்தியாவில் தஞ்சம்புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்திய குடியுரிமை பெறுவதற்கு இந்த சட்ட விதிகள் உதவி செய்கின்றன.
இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளித்தும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. இதனால் இதுவரை இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கடும் எதிர்ப்பையும் மீறி தற்போது இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் இந்திய குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க https:/indiancitizenshiponline.nic.in என்ற இணைய தளத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குடியுரிமை விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனிலைனில் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://indiancitizenshiponline.nic.in/
CAA 2019 இன் கீழ் இந்திய குடியுரிமைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கிளிக் செய்க" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
அடுத்து அதில் மொபைல் எண் மற்றும் CAPTCHA ஐ உள்ளிடவும்:
அதன்பின்பு அதில் கேட்கபட்டுள்ள தேவையான தகவல்களைத் சரியாக பூர்த்தி செய்யவும்
அதன்பின்பு உங்கள் மின்னஞ்சல் ஐடி, பெயர் மற்றும் CAPTCHA குறியீட்டை வழங்கவும்.
அதன்பின்பு கேடகபட்ட விவரங்களைப் பூர்த்தி செய்தவுடன், கீழ் உள்ள சமர்ப்பி என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு வரும் OTP மற்றும் மின்னஞ்சல் OTPகளை உள்ளிடவும்.
அடுத்து ஐடி பாஸ்வேர்டு பதிவிட்டு CAPTCHA குறியீட்டு லாகின் செய்யவும்
அடுத்து புதிய பயன்பாட்டைத் தொடங்க என்பதை கிளிக் செய்யவும் அதன்பின்பு விண்ணப்பதாரரின் பின்னணி, 2014க்கு முந்தைய குடியிருப்பு, பிறந்த இடம் மற்றும் தங்கியிருக்கும் காலம் போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.
தேவையான அனைத்து படிகளையும் முடித்து தேவையான தகவலை வழங்கிய பிறகு, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டதைக் குறிக்கும் உறுதிப்படுத்தல் செய்தி அல்லது மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்