Breaking News

தேர்தலில் போட்டியிட ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தர்ராஜன் governor Tamilisai Soundararajan resigns

அட்மின் மீடியா
0

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானாவின் ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தர்ராஜன்


தெலுங்கானா, புதுச்சேரி மாநில கவர்னராக இருந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். இவர் கவர்னர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்துள்ளார்

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை விமான நிலையம் வந்தடைந்த தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 

தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகவே கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன். தெலுங்கானா, புதுச்சேரி மக்களுக்கு நன்றியுடையவளாக இருப்பேன்.

அதேவேளை, மக்களுக்கு நேரடியாக பணியாற்றுவதே என் விருப்பம். தீவிரமான மக்கள் பணியாற்ற எனது விருப்பத்தின்பெயரில் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மக்கள் பணிக்காக கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்பது உண்மை. நான் நேரடி, நேர்மையான அரசியலுக்கு வந்துள்ளேன்.

தமிழிசை சௌந்தர்ராஜன்

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். 

கடந்த 2006, 2011, 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களிலும் தமிழிசை போட்டியிட்டுள்ளார். 

2009 மக்களவை தேர்தலில் வடசென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். 

தமிழக பாஜக தலைவராக 2014 முதல் 2019ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

 2019 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தமிழிசை தோல்வி அடைந்தார்.

2019ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தெலங்கானா ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றார்.2021 பிப். 16ம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பும் தமிழிசைக்கு வழங்கப்பட்டது. 

இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback