பேடிஎம் Fastag வைத்துள்ளவர்கள் வேறு வங்கி மூலம் Fastag பெற்றுகொள்ள அறிவுரை
பேடிஎம் Fastag வைத்துள்ளவர்கள் வேறு வங்கி மூலம் Fastag பெற்றுகொள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது
மாற்று Fastag பெறும்படி பேடிஎம் பயனர்களுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறித்தியுள்ளது
பேடிஎம் Fastag பயனர்கள் மார்ச் 15ஆம் தேதிக்கு முன்னர் வேறு வங்கி மூலம் Fastag பெற்று கொள்ளவும் மார்ச் 15க்கு பின்னர் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பட ஆர்.பி.ஐ. தடை விதித்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு NHAI அறிவுரை
நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பேடிஎம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தியவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மார்ச் 15ம் தேதிக்குள் வேறு வங்கிக்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளது.பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு, அதன் பயனர்கள் தங்கள் பேடிஎம் ஃபாஸ்டேக் பேலன்ஸ்களை ரீசார்ஜ் செய்யவோ அல்லது டாப்-அப் செய்யவோ முடியாது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தொந்தரவின்றி பயணம் செய்வதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஃபாஸ்டேக்குகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.அதில், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி லிமிடெட், பந்தன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி , மற்றும் யெஸ் வங்கி போன்ற 39 நிறுவனங்கள் உள்ளன.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு பார்க்க
https://twitter.com/NHAI_Official/status/1767888277791506635/photo/1
Tags: இந்திய செய்திகள்
